Friday, May 24th, 2013

காணாமல் போன 11 மாத குழந்தையை தேடும் பணியை அமெரிக்கப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்

Published on October 20, 2011-5:55 pm   ·   No Comments

அமெரிக்காவில் காணாமல் போன 11 மாத குழந்தையை அந்நாட்டு அதிரடிப்படை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் முசோரி மாநிலம் கன்சாஸ் நகரை சேர்ந்தவர் ஜெர்மி இர்வின் மற்றும் பிராட்லி தம்பதியினரின் 11 மாத குழந்தை லிசா இர்வின்.

இக்குழந்தையை அக்டோபர் 4ம் திகதி இரவு படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருந்த லிசாவை காணவில்லை. தற்போது லிசாவை தேடும் பணியில் பொலிசார் மட்டுமல்லாமல் அமெரிக்க அதிரடி படையினரும் ஈடுபட்டுள்ளனர். அம்மாநில கவர்னரே இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

அக்டோபர் 15ம் திகதி ஜெர்மி இர்வினின் வீட்டு அருகே இருக்கும் ஆள் இல்லாத வீட்டில் தேடினர். அங்கு குழந்தைகள் அணியும் சில உடைகள், பேபி நாப்கின் போன்றவை இருந்தன. இதையடுத்து பொலிசாருக்கு குழந்தை கடத்தலில் சில தடயங்கள் கிடைத்தன.

உள்ளூர் திருடர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் ஜெர்சி என்ற திருடன் விசாரிக்கப்பட்டான். ஆனால் அவன் மீது முழுமையாக சந்தேகம் எழவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே குழந்தை பற்றி தகவல் தருவோருக்கு 5 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என அறிவிக்கப்பட்டது. எப்.பி.ஐ எனப்படும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளும் குழந்தையை தேடுகின்றனர்.

குழந்தை பற்றி ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் நாளிதழ்களில் வெளியிட்டுள்ளனர்.

 

Related posts:

  1. காணாமல் போன சுவீடன் பெண் காலி காவல்நிலையத்தில்!
  2. தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து ஒருவயது குழந்தை பலி!
  3. ஈழத்தமிழர் அகதி முகாமில் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்- 700 அகதிகள் உண்ணாவிரதம்!
  4. போர்க்குற்றத்திலிருந்து தப்ப சிறிலங்கா தேடும் பதுங்கு குழி!
  5. ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நீடிப்பு

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

pillaiyar

மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் கடலை உட்கொண்ட 33 பேர் வைத்தியசாலையில் [May 24, 2013]

அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (24) காலை ...
british flag

இலங்கையர்களை இங்கிலாந்துக்கு கடத்தும் 18 பேர் கைது [May 23, 2013]

இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 ...
samban (1)

நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? – நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் [May 23, 2013]

'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் ...
Rayappu Joseph, Bishop of Mannar

‘பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். – நான் சமாதானத்தை விரும்புபவன் -மன்னார் ஆயர் [May 23, 2013]

பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், ...
woolwich_knif

முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதலை அடுத்து டேவிட் கமரோன் நெருக்கடி குழுவை கூட்டியுள்ளார் [May 23, 2013]

லண்டனில் நேற்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை ...
chenkalady_c1

பெற்றோரை கொலை செய்த நவீன கண்ணகிக்கும் அவளது காதலர்களுக்கும் விளக்க மறியல் [May 23, 2013]

மட்டக்களப்பு- செங்கலடி நகரில் நள்ளிரவில் தனது தாயையும் தந்தையும் கொலை ...
vadali

படைகளுக்கு காணியா? பருத்தித்துறை திக்கத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு [May 23, 2013]

பருத்தித்துறை திக்கம் பிரதேசத்தில் படையினரின் தேவைக்காகச் சுவீகரிக்கப்படும் காணியை அளவீடு ...
25

பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டு. எல்லைக்கிராமத்தில் இலவச வகுப்பு [May 23, 2013]

பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ...
london

லண்டனில் முஸ்லீம் பயங்கரவாதிகள் தாக்குதல் – ஒருவர் பலி [May 22, 2013]

லண்டனில் இன்று நடைபெற்ற ஒரு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ...
mano

சிங்களவர்களையும் புத்தரையும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும்- மனோ கணேசன் [May 22, 2013]

இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ...