கச்சதீவுக்கு சென்ற 40பேர் கடற்படையினரால் தடுத்து வைத்து விசாரணை
Published on March 4, 2012-9:56 am · No Comments
தமிழகத்திலிருந்து கச்சதீவு அந்தோனியார் உற்சவத்திற்கு சென்ற 40பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்து தடுத்து வைத்து விசாரணை செய்ததுடன் அவர்கள் கொண்டு சென்ற பொருட்களையும் பறிமுதல் செய்துவிட்டு அவர்களை வெறுங்கையுடன் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
கச்சதீவு அந்தோனியார் உற்சவத்திற்கு தமிழகத்திலிருந்து சென்றவர்களை சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்தனர். தமிழகத்திலிருந்து சென்றவர்களில் 40பேர் தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்கள் என அடையாளம் கண்டனர்.
இவர்கள் நீண்டநேரமாக விசாரிக்கப்பட்ட பின்னர் அவர்கள் கொண்டு சென்ற சாரம், போர்வை, கொலுசு, பொம்மைகள், பீடி, சிகரட், மதுபானவகைகள் என்பனவற்றை பறித்தெடுத்தனர்.
பின்னர் அவர்களை படகுகளில் ஏற்றி தமிழகத்திற்கு திரும்பி அனுப்பி விட்டனர்.
கச்சதீவு அந்தோனியார் கோயில் பெருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 140 படகுகளில் 3800க்கும் மேற்பட்டவர்கள் கச்சதீவிற்கு சென்றுள்ளனர்.
அதேபோல இலங்கையிலிருந்தும் 4ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
இன்று காலை உற்சவம் நடைபெற்று திருச்சொருப பவனி இடம்பெற்றது.
Related posts:
- கச்சதீவு உற்சவம் 19, 20ஆம் திகதிகளில்- யாழ் – தமிழக மக்கள் சந்திக்கின்றனர்.
- கச்சதீவு திருவிழாவும் சில வரலாற்று குறிப்புக்களும்!
- கச்சதீவு புனிதஅந்தோனியார் திருவிழா நிறைவு பெற்றது!
- தமிழக மீனவர்கள் 23பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது!
- ஓஸ்ரேலியாவுக்கு படகில் சென்ற போது பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம்!
செய்திகள்
மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் ...
வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ...
பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதை ...
மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் ...
தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி ...
அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (24) காலை ...
இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 ...
'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் ...
பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், ...
லண்டனில் நேற்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை ...