இலங்கை தொடர்பாக தளர்வுப்போக்கை கடைப்பிடியுங்கள்- அமெரிக்காவிடம் இந்தியா!
Published on March 5, 2012-8:12 am · No Comments
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப் படுத்துமாறு கோரியும் ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பாக தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா இராஜதந்திர அடிப்படையிலான வேண்டுகோளை விடுத்துள்ளது
இதற்கமைய ஜெனிவாவில் நிலைகொண்டுள்ள டில்லி அரசின் இராஜதந்திரிகள் குழு அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் தொடர்பில் முக்கியமான பேச்சுகளை நடத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்குமாறும் இந்தியா அமெரிக்காவிடம் கோரியுள்ளது.
உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், இலங்கை அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கை, மீள்கட்டுமான செயற்பாடுகள், புனர்வாழ்வு உட்பட கொழும்புக்குச் சாதகமான வகையிலான காரணிகளையும் இந்தியா மேற்குலகத்திடம் எடுத்துரைத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் 10ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் உறுப்புநாடொன்று பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவேண்டுமாயின், மாநாடு நிறைவடைவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னரே அது குறித்து அறிவிக்கவேண்டும். அந்த அடிப்படையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 19ஆம் திகதி சமர்ப்பிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
- நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக நியூயோர்க்கிலும் அவசர கூட்டம்! கலக்கத்தில் இந்தியாவும் சிறிலங்காவும்!
- இலங்கையின் யுத்தகுற்றங்கள் தொடர்பாக இன்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் விவாதம்!
- ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கை தொடர்பாக பிரேரணை எதுவும் இல்லை!
- நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக பங்காளி கட்சிகளுடன் பேச மகிந்த முடிவு!
- இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு!
செய்திகள்
அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு ...
இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய ...
சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் ...
கிழக்கு மாகாண ஆளுநரின் சர்வாதிகார போக்கு மற்றும் தேவையற்ற தலையீடுகளை ...
வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் ...
வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிந்து மறைந்து ...
ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற சுவிட்சர்லாந்து அயின்சீடென் (Einsiedeln ) கறுப்பு ...
19 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் ...
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...