Tuesday, May 31st, 2016

இலங்கை விவகாரத்தால் இந்திய நாடாளுமன்றம் இன்று மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டது!

Published on March 13, 2012-8:33 am   ·   1 Comment

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் பிரேரணை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் நாளை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என இந்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் பவன்குமார் பன்சால் இன்று கூறினார்.
இன்று பாராளுமன்றம் கூடிய போது ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி, மற்றும் திமுக நாடாளுமன்ற மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை ஜெனிவாவில் ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்குமா என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இதனால் இன்று இந்திய நாடாளுமன்ற கூட்டம் மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இரு சபைகளிலும் இலங்கை விவகாரம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இராஜய சபை கூட்டத் தொடரில் உரையாற்றிய பாரதிய ஜனதாக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வெங்கையா நாயுடு, ஜெனீவாவில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா என உறுதியாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரியன், இலங்கை விடயத்தில் இந்திய தலைமை அமைச்சரின் மௌனம் கலைய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
எனினும் இலங்கையுடனான உறவை முறித்துக் கொள்ள முடியாது என கொங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கூச்சலிடவே அங்கு குழப்பம் ஏற்பட்டது. இதனால் இராஜ்ய சபை சபாநாயகர் ஹமட் அன்சாரி சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.
இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும் என இந்திய பாராளுமன்ற இராஜ்ய சபையில் அறிவிக்கப்பட்ட போதிலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் கூச்சலால் இன்றை இராஜ்ய சபை நடவடிக்கைகள் மூன்றாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Readers Comments (1)

  1. p.murugaverl says:

    யெனிவாத்தீர்மானம் என்ன ஆனாலும் தமிழக உறுப்பினர்கன் தமிழர்களுக்காக ஒன்றானார்கள் என்றவரலாறு வந்துவிட்டது. கூ.அ.தாம்மட்டுமே தமிழர்களின் தலைவர்கள் என்று அடம்பிடிக்கும் மட்டத்தனமான வரலாறும் பதிவாகிவிட்டது. செத்தவீட்டிலும் ஒத்துவராத தமிழர்கள் ஈழத்தம்ிழர்கள் என்ற பழி இப்பதலமை ஏற்பவர்களுக்கு வந்தே தீருமோ!

Comments are closed.

செய்திகள்

Sampanthan

சிவில் விடயங்களில் படையினர் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது!- சம்பந்தன் [May 30, 2016]

கடற்படையினர் உட்பட்ட படையினர் சிவில் சார்ந்த விடயங்களில் நுழைய எத்தனிப்பது ...
vicki and sampanth 1

யார் குற்றினால் அரிசி ஆகும்? [May 30, 2016]

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது எமது ...
batti 3

கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் [May 30, 2016]

கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை வழங்கி வர்த்தமானி அறிவித்தல் மூலம் ...
jana

பப்பராசிகள் என்பதன் அர்த்தம் தெரியுமா? தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு புரிந்து கொள்ளுங்கள் – ஜனா [May 30, 2016]

பப்பராசிகள் என்பதன் அர்த்தம் புரியுமா? தெரியுமா? தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு ...
IMG_3983

தெற்காசிய பிராந்தியத்தின் தொடர்ச்சியான சமாதானமும் கல்வியும் [May 30, 2016]

யுனிசேவ் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடத்திய தெற்காசிய பிராந்தியத்தில் ...
palaveli1

பளவெளி சிவனாலயம் நிருமாணிக்க உதவுவார்களா? [May 30, 2016]

சம்hமந்துறைப் பிரதேசத்திலுள்ள வளத்தாப்பிட்டி பளவெளிக்கிராம சிவனாலய நிருமாணம்  நீண்ட காலமாக ...
hisbullah

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளது ஹக்கீமின் அறிவிப்பு [May 30, 2016]

சம்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்ட கிழக்கு மாகாண ...
board 1

கடந்த 3 நாட்களில் 700க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் மத்தியதரை கடலில் பலி VIDEO [May 29, 2016]

கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் மற்றும் அகதிகள் ...
nadesan. 1

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட நடேசனின் 12ஆம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி [May 29, 2016]

மட்டக்களப்பில் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி ...
paruk

மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய உதவி அரசாங்க அதிபர் என்ற கதிரை முஸ்லிம்களுக்குரிய கதிரை [May 29, 2016]

மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய உதவி அரசாங்க அதிபர் என்கின்ற கதிரை முஸ்லிம்களுக்குரிய ...