Monday, July 14th, 2014

பாணை உண்ணாதே- கொக்கோகோலாவை குடிக்காதே- சிங்கள அமைப்புக்கள் எச்சரிக்கை!

Published on March 23, 2012-5:31 pm   ·   4 Comments

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேசப் பற்றுடைய தேசிய அமைப்பினரும் பௌத்த பிக்குகளும் கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து புறக்கோட்டை போதிராஜ விகாரை வரை ஊர்வலமாக சென்று பிரசாரங்களை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசப் பற்றுடைய தேசிய அமைப்பின் செயலாளர், இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்தப் பார்க்கிறது என்று கூறினார்.

ஐ.நா.மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்ககூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். அமெரிக்காவுக்கு பலத்த எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலமே அதன் ஆதிக்க முயற்சியைத் தோற்கடிக்க முடியும். ஆகவே அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொக்ககோலா, கோதுமை மா உட்பட எது எது அமெரிக்க உற்பத்திப் பொருட்கள் என மக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விநியோகிக்கப்பட்டன.

Readers Comments (4)

 1. இதயச்சந்திரன் says:

  கவலைப்பட வேண்டாம் சிங்கள சகோதரர்களே., சிறிமாவோ காலத்தில், ‘காட்ட’ வோடு [வெறும் தேத்தண்ணி], ‘ஹக்குறு’ வை [சக்கரை ] நக்கிக் குடித்த பரிதாப நிலையை, மீண்டும் கொண்டுவரப்போகிறார் உங்கள் மகிந்த மன்னர். நீங்கள் கொக்காகோலாவை புறக்கணித்தால், அமெரிக்காவிற்கு ஒரு மயிர் உதிர்ந்த மாதிரி. முதலில் நாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான சூதாட்ட விடுதிகளை [கசினோ] பூட்டுங்கள். விலைவாசி ஏற்றத்திற்கு எதிராகப் போராடுங்கள்

 2. mpillai says:

  இந்தச்சிங்கள மக்களுக்கு இருக்கின்ற உணர்வு உங்களைப்போன்றவர்களுக்கு இல்லையே முதலில் உங்கள் தமிழ்மக்களுக்கு சொல்லுங்கோ இதயச்சந்திரன் நீங்கள் உங்களை ஆய்வாளராகக்காட்டிக்கொண்டு கருத்துக்கள் சொல்கின்றீர்கள் ஆனால் தமிழர்களை சிங்களதேசத்துப்பொருட்களை வாங்கவேண்டாம் என்று சொல்லவக்கில்லையே என்னே ஆய்வாளர் நீங்கள் உங்களுக்கே சிங்களவருடைய களிவு நீரில் வளரும் பொன்னாங்காணியும் வல்லாரையும் இல்லாட்டில் பத்தியப்படாது will you say to your tamils to boycut sri lanka products you cant முதலில் தமிழர்க்குத்தேவை சிங்களத்தயாரிப்பான கட்டச்சம்பொல் எம் டி தயாரிப்புக்கள் ஸ்ரவுட் லயின்லாகர்.மாசுக்கருவாடு.உயிர்மீன்.போங்கய்யா னீங்களும் ஒரு ஆய்வாளர்.

 3. Hary Nathan says:

  Hello Bhudda Pikkus,

  Do your work at Bhudda Temple not on the Street. If you are on the street means you are gangers. So please change your name as a “Moddai Gangers” with yellow dress.

 4. இதயச்சந்திரன் says:

  பிள்ளை, நான் சொல்ல வந்த விடயம் உங்களுக்கு புரியவில்லை. கழிவு நீரில் மட்டும் , கீரைகள் வளரும் என்று கூறும் உங்கள் அறிவு போற்றத்தக்கது. நீங்கள் என்னை ஆய்வாளர் என்று சொன்னால் நான் என்ன செய்வது?.வந்த செய்திக்கு எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். எனது கருத்திற்கு பதில் சொல்வதை விடுத்து, செய்தி குறித்த உங்கள் கருத்தை எழுதுங்கள். அதை வாங்கு..இதை வாங்க வேண்டாம் என்று சொல்வதற்கு நான் என்ன மேர்வின் சில்வா போன்ற அரசியல்வாதியா?.புலம்பெயர் மக்களுக்கு நீங்களே சொல்லுங்கள்,

Comments are closed.

செய்திகள்

mavai_mp_002

தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதில்லை: மாவை [July 14, 2014]

இலங்கை அரசாங்கம், தமிழ்மக்கள் விரும்பாத நபரை மீண்டும் வடமாகாண ஆளுநராக ...
DSC_0367

பாலையுற்றுஎண்ணெய்காப்பு [July 14, 2014]

பிரசித்தி பெற்று விழங்கும் திருகோணமலை பாலையுற்று  அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் ...
gopi

மோடியின் புதிய திட்டம் என்ற புத்தகத்தில் து.சிவப்பிரகாசத்தின் கட்டுரை [July 14, 2014]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புதிய திட்டம் என்ற புத்தகத்தில் ...
???????????????????????????????

PMGGயின் ஏற்பாட்டில் பெண்களுக்கான மாபெரும் இப்தார் நிகழ்வு [July 14, 2014]

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஆண்களுக்கான விசேட ...

மலையகத்தில் மினிசூறாவளி – ஒருவா் பலி – 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் [July 14, 2014]

நாட்டில் வீசிய பலத்த காற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 376 ...
mnkey

நாங்க சோடா குடிக்கமாட்டோமா? [July 14, 2014]

நீங்க மாத்திரம்தான் சோடா குடிப்பீங்களா? ஏன் நாங்க குடிக்கமாட்டோமா? இப்படிக் ...
selvam-and-TBC-logo

கச்சதீவை ஒரு போதும் இந்தியாவுக்கு வழங்க முடியாது- செல்வம் அடைக்கலநாதன் [July 8, 2014]

இலங்கை சொந்தமான முக்கியமாக வடமாகாண எல்லைக்குட்பட்ட கச்சதீவை இந்தியாவுக்கு கொடுத்து ...
Selvam

தென்னாபிரிக்க மத்தியஸ்த முயற்சியை நிராகரிக்க முடியாது- செல்வம் தினக்கதிருக்கு செவ்வி [July 8, 2014]

தென்னாபிரிக்க குழுவின் இந்த விஜயம் எந்த வகையில் தமிழ் மக்களின் ...
jaffna university 1

தமிழ் மாணவர்களோடு பேசினால்…..நடத்தை கெட்டவள்- முஸ்லீம் மஜிரிஸின் முட்டாள்தனம் [July 8, 2014]

முற்றிலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக ...
kotta

The Shadow of Gotabhaya – Ravaya by Victor Ivan [July 8, 2014]

One named Gotabhaya Rajapaksa happens to enter Sri ...