Wednesday, July 23rd, 2014

வவுனியாவிலும் காணாமல் போகச்செய்யப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ்

Published on August 28, 2012-10:20 am   ·   No Comments

முல்லைத்தீவு, கிளிநொச்சியைத் தொடர்ந்து இப்பொழுது வவுனியாவிலும் யுத்தத்தின் பின்னர் சரணடைந்தும் இன்னபிற வழிகளில் பிடிபட்ட பின்னரும் காணாமல் போகச்செய்யப்பட்டோருக்கான மரணச் சான்றிதழை வழங்குவதற்குவதான முயற்சிகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் அத்துடன் மேலும் சிலர் அண்மையில் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் கிடைத்திருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஆகவே இதனைத் தடுத்து நிறுத்துவதற்குச் சர்வதேச சமூகமும், மனித உரிமைகள் அமைப்புக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முன்வரவேண்டும் என்று அவர் ஊடகங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யுத்தம் நடைபெற்ற காலகட்டத்திலும், யுத்தத்தின் பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்ததன் பின்னர் காணாமல் செய்யப்பட்டோருக்கும், இடைத்தங்கல் முகாம்களிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கும் வவுனியாவிலும் மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவக்கை எடுக்கப்பட்டு காவல்துறையினர் மூலம் காணாமல் போனவர்களின் வீடுகளுக்கு மரணச்சான்றிதழுக்கான விண்ணப்பங்களும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே தமது பிள்ளைகளும், கணவரும், நெருங்கிய உறவினரும், வேண்டப்பட்டவர்களும் உயிருடன் இருக்கின்றனரா என்பது தெரியாமல் ஏதோவொரு நம்பிக்கையில் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கும் எமது மக்கள் அரசின் இந்நடவடிக்கையால் பெரிதும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

தமது கண்களின் முன்னால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போயினர் என்று அவர்கள் அதிர்ச்சியும் வேதனையும் கவலையும் அடைந்துள்ளனர். அத்துடன் காவல்துறையினர் கொடுத்த விண்ணப்பப் படிவங்களையும் வாங்க மறுத்துள்ளனர். எமக்கு எமது பிள்ளைகள் வேண்டும், எமக்கு எனது கணவர் வேண்டும், எமக்கு எமது உறவுகள் வேண்டும். அவர்கள் குற்றமிழைத்திருந்தால் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வழங்குங்கள் அதைவிடுத்து மரணச்சான்றிதழ் வழங்குவது எந்தவகையில் நியாயம் என்று அவர்கள் கேட்கின்றனர்.

சில உதாரணங்களை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
வவுனியா, கல்மடு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் உதயகுமார் என்னும் 40வயது இளைஞர் (தற்போதைய வயது) கடந்த 08.01.2007 அன்று கல்மடுவிற்கும் ஈச்சன்குளத்திற்கும் இடையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ததன் பின்னர் அவரை மண்டியிடச் செய்திருந்த நிலையில் அவரது சகோதரி அவரைப் பார்த்துள்ளார். இவரது தாயாரிடம் புலனாய்வுத்துறையினர் பலமுறை விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனைப் போன்றே வவுனியா சாளம்பனைச் சேர்ந்த நடராசா பேரின்பராசா என்னும் 38 வயதுடைய (தற்போதைய வயது) இளைஞரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பொழுது இவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

மேற்கண்ட சம்பவங்கள் சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்களைப் புரிந்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்கும் என்று நம்புகின்றேன். ஆகவே சர்வதேச சமூகத்தினரும் மனித உரிமைகள் அமைப்புக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் நல்லுள்ளம் கொண்டோர்களும் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டோரின் விடயம் தொடர்பான உண்மைநிலையைக் கண்டறிந்து, தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் கிடைப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இது ஒருபுறமிருக்க, மிக அண்மையில் வவுனியாவில் சில யுவதிகள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். தமது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி அவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குப் பெற்றோர் தயங்குகின்றனர். காணாமல் போகச் செய்யப்பட்ட தமது பிள்ளைகள் குறித்து வெளியிலும் சொல்ல முடியாமல், மனத்திற்குள்ளும் தேக்கிவைக்க முடியாமல், மிகுந்த துன்பத்துடன் மனவேதனையை அனுபவித்துவரும் குடும்பத்தினரின் பரிதாபநிலையையும் அதனால் அவர்கள் மனோநோயாளிகளாக உருவாவதற்கான சூழலையும் கருத்திற்கொண்டு இந்த விடயத்திலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது இளைஞர்களும், யுவதிகளும் வெளிநாடுகளுக்குக் குறிபப்hக அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் உணர்ந்துகொள்ள வேண்டும். தற்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை அரசினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமானோர் ஆபத்தான கடற்பயணத்தில் உயிரழந்துமுள்ளனர். எனவே, எஞ்சியுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு முகாம் உள்ளிட்ட ஏனைய தடுப்பு முகாம்களில் உள்ள அனைத்து தமிழ்ப் பிரஜைகளையும் நிபந்தனையின்றி விடுவிப்பதற்குச் சர்வதேச சமூகமும், மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் சமுதாயத்தின்மீது அக்கறை கொண்ட அனைவரும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

DSC02461

பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்யுமாறு ஆர்ப்ப்பாட்டம் [July 22, 2014]

இரத்தினபுரி காவத்தை டெல்வின் தோட்டத்தில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ...
DSC02424

14வயது சிறுமி மீது சிங்கள கடைமுதலாளி பாலியல் பலாத்காரம் [July 22, 2014]

லிந்துலை நாகசேனை நகரத்தை அண்மித்த தோட்டமொன்றில் கடந்த சில நாட்களுக்கு ...
sril

ஆலய காணியை அபகரிக்கும் நோக்கில் முஸ்லீம்கள் ஆலயத்தை உடைத்துள்ளனர் [July 22, 2014]

தாக்குதலுக்கிலக்கான மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்திற்கு இலங்கையின்; ஒரே இந்து தேசிய ...
20140721_135743

ஆலயத்தை சேதமாக்கியவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்- ஆலய நிர்வாகம் [July 22, 2014]

அமைதியான சூழ்நிலையில்; நிந்தவூர்; பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாட்டுப்பழை மடத்தடி ...
20140721_134313

முஸ்லீம்களால் சேதமாக்கப்பட்ட ஆலயத்திற்கு த.தே.கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் விஜயம்! [July 22, 2014]

நேற்றிரவு முஸ்லீம்களால் உடைத்து சேதமாக்கப்பட்ட நிந்தவூர்; மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ...
George

மட்டக்களப்பு றோட்டரி கழக தலைவராக ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர் ஜோர்ஜ் தெரிவு [July 21, 2014]

மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் 2014-2015 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக ...
Untitled-02

மலேஷிய விமானத்தில் தமிழ் நடிகையான சுபாஷினி ஜெயரத்னமும் உயிரிழந்துள்ளார். [July 21, 2014]

சூட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானத்தில் மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையான ...
DSC_0878

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாநாட்டில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையின் முழு வடிவம் [July 21, 2014]

மிகவும் இக்கட்டான ஒரு கால கட்டத்தில் ஈழ மக்கள் புரரட்சிகர ...
???????????????????????????????

யாழ்ப்பாணத்தில் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு [July 21, 2014]

சிந்தனைகூடம் - ஆய்வு அபிவிருத்தி நிறுவனமும் கொழும்பிலுள்ள ளுடு2 ஊழடடநபந ...
IMG_6776

கிளிநொச்சி ஆலய காணியை அபகரித்த சிங்களவர்- மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் [July 21, 2014]

தமது கிராமத்தின் பொதுக்காணியை தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் அபகரிப்பதைக் கண்டித்து, ...