Tuesday, July 29th, 2014

வவுனியா இந்து அன்பகத்தின் நீர்ப்பிரச்சினையைத் தீர்த்துவைத்த ரஜிந்தாவின் பெற்றோர்

Published on October 12, 2012-11:09 am   ·   No Comments

வவுனியா இந்து அன்பகத்திற்கு பிரான்சிலிருந்து இயங்கும் ரி.ஆர்.ரி. தமிழொலி வானொலி நேயர் பொன்னம்பலம் கணேசலிங்கம் சதீஸ் தம்பதியர் தமது புதல்வி அமரர் செல்வி ரஜிந்தாவின் நியாபகார்த்தமாக அவரது நினைவுநாளில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து நீர்த்தாங்கியையும் கட்டிக்கொடுத்துள்ளனர்.

இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள இந்து அன்பகத்தில் தாய் தந்தையரை இழந்த மற்றும் வறுமையால் வாடும் பெற்றோர்களின் பிள்ளைகள் தங்கியுள்ளனர்.

வவுனியாவில் நிலவும் வரட்சி இந்து அன்பகத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையத்தின் கிணறு வற்றிவிட்டதால் அன்பகம் பெரும் நீர்ப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. இந்த விடயம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அவரது வேண்டுகோளுக்கு இணங்க பிரான்சிலிருந்து இயங்கும் ரி.ஆர்.ரி. தமிழொலி வானொலி நேயர் பொன்னம்பலம் கணேசலிங்கம் சதீஸ் தம்பதியர் தமது புதல்வி அமரர் செல்வி ரஜிந்தாவின் நியாபகார்த்தமாக அவரது நினைவுநாளில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து நீர்த்தாங்கியையும் கட்டிக்கொடுத்துள்ளனர்.

இந்து அன்பகத்தின் தலைவி சாமிஅம்மா என்று அழைக்கப்படுகின்ற சிவச்செல்வி கு.ஜெயராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நீர்த்தாங்கியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினர்களாக பண்டாரிக்குளம் முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ ஆதி சௌந்தர்ராஜா குருக்கள், கிளிநொச்சி பிராந்திய மின்சாரசபை பொறியியலாளர் பிரபாகரன், யாழ் இணுவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியியலாளரான பொ.பாலசுப்பிரமணியம், ஓய்வு பெற்ற வங்கியாளர் வை.ஸ்ரீஸ்கந்தவரோதயன், வவுனியா தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் மருத்துவக்கலாநிதி கந்தையா இராமச்சந்திரன், வவுனியா பிரதேசசபை உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன், சமூகசேவையாளர்கள் திரு.திருமதி. மா.கதிர்காமராஜா மற்றும் சண்மாஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அன்பகச் சிறார்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,
எமது புலம்பெயர் உறவுகளும் தாய்நாட்டில் வாழும் உறவுகளும் தங்களது ஆடம்பரச் செலவினங்களைக் குறைத்து வடக்கு-கிழக்கில் பல்வேறு காப்பகங்களில் தமது எதிர்காலக்கனவுகளைச் சுமந்து வாழும் பல்லாயிரக்கணக்கான சிறார்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முன்வரவேண்டும். எம்மீது திணிக்கப்பட்ட யுத்தம் பல்லாயிரக்கணக்கான சிறார்களை ஆதரவற்றவர்களாக ஆக்கியுள்ளது. அவர்கள் பல்வேறு காப்பகங்களில் தங்கியுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் மட்டும் ஒன்பது காப்பகங்களில் 1200 சிறார்கள் வசிக்கின்றனர்.
எமது உறவுகள் அவர்களது எதிர்காலக் கனவுகளை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும். தங்களது பிள்ளைகளின் பூப்புனித நீராட்டுவிழா, பிறந்தநாள்விழா, திருமணம் போன்ற வைபவங்களுக்கான ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு காப்பகங்களில் வாழுகின்ற சிறார்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

இதற்கு முன்னுதாரணமாக யாழ் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டு பிரான்சில் வசித்துவரும் கணேசலிங்கம் தம்பதியர் திகழுகின்றனர். தமது புதல்வியின் நினைவுநாளில் வவுனியா இந்து அன்பகத்தில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் நீர்ப்பிரச்சினையைத் தீர்த்து அந்தக்குழந்தைகளின் மகிழ்வில் தமது புதல்வி ரஜிந்தாவின் சிரிப்பைப் பார்க்கின்றனர்.
ரி.ஆர்.ரி வானொலி தமது நேயர்களின் மூலம் பல்வேறு வழிகளிலும் யுத்தத்தால் பாதிப்புற்ற எமது மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது. அவர்களது பணி சிறக்க வேண்டும். இதனை ஏனையோர்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

DSC09052

புத்தளத்திலிருந்து திருடுவதற்கு என்றே மாமாங்கம் வந்த பெண்கள் [July 27, 2014]

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்த உற்சவத்தின்போது கொள்ளைகளில் ஈடுபட்ட குழுவொன்றினை காவல்துறையினர் ...
janasara

ஞானசாரர், சம்பிக்க ஆகியோரின் பேஸ்புக்கிற்கு எதிராக 12இலட்சம் முறைப்பாடு [July 27, 2014]

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் ...
ausralia priminister

ஆட்கடத்தலை தடுப்பதில் ஒஸ்ரேலியா உறுதியாக உள்ளது [July 27, 2014]

பல வாரகாலமாக நடுக்கடலில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ...
maaviddapuram_006

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று நடைபெற்றது [July 25, 2014]

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் ...
mamangeswarar 4

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. [July 25, 2014]

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ...
SAM_4113

சின்னடம்பன் காணி அபகரிப்பு- சிவசக்தி ஆனந்தன் அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தார் [July 25, 2014]

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னடம்பன் கிராம ...
image7

முல்லைத்தீவில் போக்குவரத்து ஆளணி, நீர், பௌதிக வள பற்றாக்குறையால் பாடசாலைகள் பாதிப்பு [July 25, 2014]

முல்லைத்தீவு மாவட்டத்தில் போக்குவரத்து, ஆளணி, பௌதீக வளப்பற்றாக்குறைகளால் பல பாடசாலைகள் ...
s4

முல்லைத்தீவில் கற்றல் உபகரணங்களை வழங்கிய அன்புக் கரங்கள் [July 24, 2014]

சுவிற்சலாந்தில் இயங்கிவரும் அன்புக் கரங்கள் நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் முல்லைத்தீவு ...
Sri lanka

மாறுதடம் – ஈழத்து தமிழ் சினிமாக் கலைஞர்களின் கலைத்துவப்படைப்பு [July 24, 2014]

'மாறுதடம்' எனும் புலம்பெயர் தமிழர் தம் வாழ்வியலைச் சித்தரிக்கும் கலைத்துவ ...
today3

கிழக்கில் மாபெரும் கண்ணகி கலை இலக்கிய விழா- வி.ரி.சகாதேவராஜா [July 23, 2014]

கிழக்கில் கண்ணகி அம்மன் வழிபாடு இங்குள்ள மக்களின் வாழ்வியலோடு பின்ணிப்பிணைந்த ...