Thursday, July 30th, 2015

கொழும்பு செல்லவிடாது படையினரால் தடுக்கப்பட்ட மக்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Published on March 6, 2013-8:48 am   ·   No Comments

கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்காக சென்ற வேளையில் வவுனியாவில் வைத்து சிறிலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வடமாகாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று காலை வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

காணாமல் போனோரின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
படையினரால் மக்கள் தடுத்து வைக்கப்பட்ட காரணத்தால் அதிகாலை முதல் வவுனியா நகரசபை மைதானத்தில் தமது போராட்டத்தை நடத்திய காணாமல் போனவர்களின் உறவினர்கள் முற்பகல் 9மணிக்கு பின்னர் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக சென்று மகஜர் கையளித்தனர்.

வடக்கு உட்பட காணாமல் போனவர்களின் உறவினர்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். இதற்காக சுமார் 11பேருந்துகளில் நேற்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு பயணமாகினர். அவ்வேளையில் அவர்களை வவுனியாவில் வைத்து கொழும்பு செல்லவிடாது தடுத்து வவுனியா பொது மைதானத்தில் கடந்த இரவு தடுத்து வைத்திருந்தனர்.

சிறிலங்கா படையினருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சிறிலங்கா படையினர் கொழும்பு செல்லவிடாது தடுத்து வைத்துள்ளனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

colombo_killing_girl_2

கொழும்பில் பயணப் பெட்டியில் சடலமாக மீட்கப்பட்டவர் வட்டுக்கோட்டையை சேர்ந்த தமிழ் பெண் [July 30, 2015]

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் இருந்து மீட்கப்பட்ட ...
DSC_0005

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் [July 30, 2015]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதான தேர்தல் பிரசார ...
dakkan

பாண் கொடுக்கவில்லை என பெண்ணை கொலை செய்த ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு மரணதண்டனை [July 30, 2015]

வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் ...
flag

இலங்கை தேசியக்கொடியை இறக்கி விட்டு தனி சிங்கள பௌத்த கொடியை ஏற்றிய பொதுபலசேனா [July 30, 2015]

பொதுபல சேனா அமைப்பு இலங்கையின் தேசியக்கொடியை இறக்கி விட்டு தனியே ...
colombo_killing_girl

புறக்கோட்டையில் பயணப் பெட்டியில் இருந்த சடலம் தமிழ் பெண்ணினுடையதா? [July 29, 2015]

கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிடத்தில் பயணப் ...
thaya master

பிரபாகரனை மகிந்த தாக்கிய பின்னரே கொல்லப்பட்டார் என்ற செய்தி உண்மை என்கிறார் தயா மாஸ்ரர் [July 29, 2015]

பிரபாகரனை மகிந்த தாக்கிய பின்னரே கொலை செய்யப்பட்டார் என கருணா ...
thamirajah son

தம்பிராஜாவின் மகன் வெள்ளவத்தையில் கைது [July 29, 2015]

கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட தம்பிராஜாவின் மகன்  வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
kajendra

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்மை எங்கு அழைத்துச் செல்லும்? [July 28, 2015]

தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறிக் கொண்டு ...
hissu

ஓட்டமாவடி காளிகோவில் காணியை எடுத்து பள்ளிவாசலுக்கு கொடுத்தது நானே – ஹிஸ்புல்லா [July 26, 2015]

யுத்த சூழலை பயன்படுத்தி மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளில் சைவக்கோவில்களை அழித்து ...
rajitha senaratna

சம்பந்தன் சொல்வதெல்லாம் பொய்- சுயாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை – ராஜித சேனாரட்ணா அறிவிப்பு [July 23, 2015]

ஒற்றையாட்சி ஊடாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வை காணமுடியும் என்றும் மாநில சுயாட்சி ...