Saturday, February 28th, 2015

சென்னையில் தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்

Published on May 21, 2013-11:57 am   ·   No Comments

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக இலங்கைத் தமிழரான சுந்தரேசன் என்பவர் தனது தாயுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார்.

சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42வது தெருவில் குடியிருக்கும் அவர், டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வந்தார். அவரது மனைவி சித்ரா (45). அவர்களுக்கு சமீரா(12) என்ற மகள் இருந்தார்.

இந்நிலையில் லாபத்தில் சென்ற டிராவல்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் ஓடியது. இதனால் விரக்தி அடைந்த சுந்தரேசன் மது அருந்த ஆரம்பித்தார். அவரது குடிப்பழக்கத்தால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

டிராவல்ஸ் நிறுவனம் சரியாக நடக்காததால் சுந்தரேசன் சிலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியுள்ளார். அவர் கடனை திருப்பிக் கொடுக்காததால் பணத்தை கொடுத்தவர்கள் அதை திருப்பிக் கேட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு சென்ற சுந்தரேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து அவர் ஒரு அறையிலும், அவரது தாய், மனைவி மற்றும் மகள் ஆகியோர் பக்கத்து அறையிலும் தூங்கியுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணிக்கு எழுந்த சுந்தரேசன் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் குடும்பத்தாரை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது தாய், மனைவி மற்றும் மகள் ஆகியோரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதிக்கு சென்றார். அவர் பரங்கிமலை, பழவந்தாங்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலின் முன்பு அவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது சுந்தரேசனின் செல்போன் சேதமடையாமல் இருந்ததை பார்த்த பொலிஸார் அதை வைத்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உடல் சிதறி இறந்தவர் டிராவல்ஸ் அதிபர் சுந்தரேசன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தாம்பரம் ரயில்வே பொலிஸார் சுந்தரேசனின் வீட்டுக்கு சென்றபோது அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் 3 பிணங்கள் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து ஆதம்பாக்கம் பொலிஸாசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் சுந்தரேசன் தன் குடும்பத்தாரை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து, வீட்டில் கிடந்த 3 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் மற்றும் ஆதம்பாக்கம் பொலிஸார் தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Sakthy MP

கிழக்கு மாகாண அமைச்சரவை தெரிவு மனவருத்தம் அளிக்கின்றது- சிவசக்தி ஆனந்தன் [February 27, 2015]

கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப்பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் ...
kaddaikadu-attack-02

இந்தியர்களின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டுங்கள்- ஈழத்தமிழ் மீனவர்கள் கோரிக்கை [February 27, 2015]

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மீனவர்களின் ...
indian 1

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் புரிந்த 86 இந்திய மீனவர்கள் கைது [February 27, 2015]

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தடை செய்யப்பட்ட வலைகளை பாவித்து மீன்பிடித்த ...
thamarai

நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன்: கணவர் தியாகுவுக்கு எதிராக கவிஞர் தாமரை போராட்டம் [February 27, 2015]

தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தன்னுடைய கணவர் ...
Eastern Province TNA

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைச்சு விபரங்கள். [February 26, 2015]

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சு ...
paris

ஈபிள் கோபுர பகுதியை இரவு வேளையில் ஆளில்லா விமானமூலம் படம் பிடித்தவர்கள் கைது [February 26, 2015]

ஈபிள் கோபுரம் உட்பட பிரான்ஸின் தலைநகர் பரிஸ் நகரின் பல்வேறு ...
batti_school_sports_meet_001

புலம்பெயர்ந்தவர்கள் முட்டாள்தனமாக காரியங்களை செய்கின்றனர்- யோகேஸ்வரன் குற்றச்சாட்டு [February 26, 2015]

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் சிலர் தாங்கள் முடிவுசெய்வதையே ...
sivachandran

தமிழர்களுக்கு அறிவுமைய அரசியல் தேவை – பேராசிரியர் இரா.சிவசந்திரன் [February 26, 2015]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்தி நிறுவனத்தின் குழுநிலை ஆய்வுக் ...
sumanthiran

கடந்த முறை ஐ.நா. தீர்மானத்தை கண்டித்து எரித்தவர்கள் இப்போது அது வேண்டும் என்கிறார்கள் [February 23, 2015]

கடந்த முறை ஐநா தீர்மானத்தை கண்டித்து அதனை எரித்தவர்கள் தற்போது ...
???????????????????????????????

அநாமதேய இணையத்தளங்களை நடத்துபவர்களுக்கு வித்தியாதரன் சாட்டையடி [February 23, 2015]

முகமூடிகளை போட்டுக்கொண்டு அநாயமதேய இணையத்தளங்களை நடத்துபவர்களுக்கு மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் ...