Thursday, January 19th, 2017

கிழக்கு மாகாணசபையின் மட்டக்களப்பு தமிழ் உறுப்பினர்களுக்கு அடிப்படை அறிவு கிடையாது- அமிர்அலி கேலி. VIDEO

Published on December 30, 2016-7:48 pm   ·   No Comments

ameer-aliகிழக்கு மாகாணசபையின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் என பிரதியமைச்சர் அமீர்அலி கிண்டல் செய்துள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் தமிழ் உறுப்பினர்களுக்கு எதை எங்கு பேசவேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது. தாங்கள் அனுபவசாலிகள் என்று கூறிக்கொண்டு தலைக்கும் வாய்க்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுவதனை எங்களால் சகித்துக்கொள்ளமுடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். மட்டக்களப்பு தமிழர்களும் முட்டாள்களாகவே இருக்கின்றனர். அறிவற்றவர்களை தங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் கொண்டுவந்த அரசாங்கம் என்று கூறுகின்றனர். நாங்கள் கொண்டுவந்த மாகாணசபை என்கின்றனர். எங்களால் தான் முதலமைச்சர் வந்தார் என்கின்றார்கள். வேலை நடக்கவில்லையென்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் வந்து ஒப்பாரி வைக்கின்றார்கள். இதனைவிட கேவலம் என்ன உள்ளது என்றும் அமீர்அலி தெரிவித்தார்.

தனக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எந்த பிரச்சினையும் முரண்பாடும் கிடையாது,  ஒருபேச்சுப் போட்டி வைத்து பேசவிரும்புகின்ற கிழக்கு மாகாணசபையின் தமிழ் உறுப்பினர்களை வெபர் மைதானத்திற்கு அழைத்து அவர்களுக்கு கொடிகட்டி அவர்கள் பேசி அலுக்கும் மட்டும் பேசவைக்கவேண்டும் என்று நான் விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக சட்டத்தரணி கி.துரைராசசிங்கம், ஆர்.துரைரத்தினம், இந்திரகுமார் பிரசன்னா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், ஞா.கிருஷ்ணபிள்ளை ( வெள்ளிமலை ) மா.நடராசா ஆகியோர் உள்ளனர். இந்த ஆறுபேரும் அடிப்படை அறிவு அற்றவர்கள் என பிரதியமைச்சர் அமிர்அலி கேலி செய்துள்ளார்.ameer-ali

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kokkaddicholai

கொக்கட்டிச்சோலை படுகொலை 30ம் ஆண்டு வணக்க நிகழ்வு 28ஆம் திகதி சனிக்கிழமை. [January 18, 2017]

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் ...
batti

கடும் வரட்சி- மட்டக்களப்பில் 13164 விவசாயிகளும் 76199 பொதுமக்களும் பாதிப்பு [January 17, 2017]

கடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் ...
sasikumar

2014ம் வருடத்தில் மட்டக்களப்பில் சிறந்த இளைஞர் சேவை அலுவலராக சசிகுமார் தெரிவு. [January 17, 2017]

கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் செயற்படுகின்ற ...
11 (1)

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட 230பேருக்கும் நியமனக்கடிதங்கள். [January 16, 2017]

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் மூன்றிற்கு திறந்த போட்டி ...
DSC_5706

ஜிஎஸ்பி+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் – ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ கணேசன் [January 16, 2017]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல ...
kattankudy

முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!.. [January 16, 2017]

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை ...
kattankudy Hospital

காத்தான்குடி தள வைத்தியசாலை சகல வசதிகளும் கொண்ட போதனா வைத்தியசாலையாக தரமுயர்கிறது- [January 12, 2017]

நாடாளாவிய ரீதியில் முஸ்லீம் பிரதேசங்களில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு ...
jpeg 8

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் குடிசார் சமூக அமைப்பு உதயம். [January 12, 2017]

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை, போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான குடிசார் சமூக அமைப்பொன்று ...
01

கொத்மலை தேயிலை மலையிலிருந்து வீழ்ந்து பெண் கங்காணி மரணம் [January 10, 2017]

கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் ...
hisbullah

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ். [January 10, 2017]

சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி ...