Thursday, January 19th, 2017

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்! – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

Published on January 3, 2017-4:48 pm   ·   No Comments
687cb6cb-4e67-44a2-821a-e325ad90062dயுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அம்மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இந்த வருடத்தில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சில் புதுவருட நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை அமைச்சர் சுவாமினாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அதிகளவு தொடர்புடைய அமைச்சே மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு அமைச்சு. யுத்தம் நிறைவடைந்த போதிலும் அம்மக்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கு இந்த அமைச்சினால் நடவடிக்கை எடுக்க முடியும்.
வடகிழக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இந்த வருடத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரும் ஒன்றினைந்து பணிபுரிவோம் – என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சின் செயலாளர் டீ.எம்.அமரதுங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசு, இராஜாங்க அமைச்சின் பிரத்தியோக செயலாளர் றயிஸ{த்தீன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். 687cb6cb-4e67-44a2-821a-e325ad90062d27501fcc-a1bc-408c-a179-a39795ef9a10

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kokkaddicholai

கொக்கட்டிச்சோலை படுகொலை 30ம் ஆண்டு வணக்க நிகழ்வு 28ஆம் திகதி சனிக்கிழமை. [January 18, 2017]

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் ...
batti

கடும் வரட்சி- மட்டக்களப்பில் 13164 விவசாயிகளும் 76199 பொதுமக்களும் பாதிப்பு [January 17, 2017]

கடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் ...
sasikumar

2014ம் வருடத்தில் மட்டக்களப்பில் சிறந்த இளைஞர் சேவை அலுவலராக சசிகுமார் தெரிவு. [January 17, 2017]

கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் செயற்படுகின்ற ...
11 (1)

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட 230பேருக்கும் நியமனக்கடிதங்கள். [January 16, 2017]

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் மூன்றிற்கு திறந்த போட்டி ...
DSC_5706

ஜிஎஸ்பி+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் – ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ கணேசன் [January 16, 2017]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல ...
kattankudy

முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!.. [January 16, 2017]

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை ...
kattankudy Hospital

காத்தான்குடி தள வைத்தியசாலை சகல வசதிகளும் கொண்ட போதனா வைத்தியசாலையாக தரமுயர்கிறது- [January 12, 2017]

நாடாளாவிய ரீதியில் முஸ்லீம் பிரதேசங்களில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு ...
jpeg 8

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் குடிசார் சமூக அமைப்பு உதயம். [January 12, 2017]

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை, போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான குடிசார் சமூக அமைப்பொன்று ...
01

கொத்மலை தேயிலை மலையிலிருந்து வீழ்ந்து பெண் கங்காணி மரணம் [January 10, 2017]

கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் ...
hisbullah

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ். [January 10, 2017]

சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி ...