Thursday, January 19th, 2017

ஈ.பி. ஒட்டுக்குழு சிவசக்தி ஆனந்தனே சம்பந்தனின் படத்தை எரிக்க தூண்டினார்- பகிரங்க குற்றச்சாட்டு .

Published on January 4, 2017-7:00 pm   ·   No Comments

thurairasasingamவவுனியாவில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் படத்தை எரிப்பதற்கு தூண்டியவர்கள் தான் வவுனியாவில் சிலர் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தார்கள் என தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தில் நேற்று(03) பிற்பகல் 35 விவசாயிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்த மக்களைத் தூண்டி விட்டவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும். அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தான் இருக்கின்றார்கள். எங்களுடைய வீட்டை வைத்துக் கொண்டுதான் வாக்கு கேட்டு வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனாலும், கூட இருந்து குழி பறிக்கின்றார்கள். இது அவர்களுக்கு பழக்க தோசம், கூட இருந்தவர்களையே படுகொலை செய்தவர்கள் அவர்கள்.

அவர்கள் சொல்லியதன் காரணமாகத்தான் அந்த ஆர்ப்பாட்டம் வவுனியாவில் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான காணொளியில் ஒரு பெண் எதிர்க் கட்சித் தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றார்.

ஒரு தமிழன், ஒரு தமிழச்சி அவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகிக்க கூடாது. எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு எங்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கும் அந்த தலைவரை அந்த பெண் அப்படிச் சொல்லுகின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயத்தை ஐக்கிய நாடுகளுக்குச் சென்று அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குரிய நிலையம் ஒன்று கொழும்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை உருவாக்கிக் கொடுப்பதற்கு முக்கியமாக பங்களித்தவர் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் ஆவார்.

அவ்வாறு இருக்கும் போது ஒரு விதமான அடிப்படையும் இல்லாது தூண்டப்பட்டு, ஆர்ப்பாட்டம் செய்து காணாமல் ஆக்கப்பட்டதற்கு பதில் சொல்ல வேண்டும் என கூறியிருக்கின்றார்கள்.
இவ்வாறான பிரச்சினைகள் எமது பிரதேசங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.thurairasasingam

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kokkaddicholai

கொக்கட்டிச்சோலை படுகொலை 30ம் ஆண்டு வணக்க நிகழ்வு 28ஆம் திகதி சனிக்கிழமை. [January 18, 2017]

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் ...
batti

கடும் வரட்சி- மட்டக்களப்பில் 13164 விவசாயிகளும் 76199 பொதுமக்களும் பாதிப்பு [January 17, 2017]

கடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் ...
sasikumar

2014ம் வருடத்தில் மட்டக்களப்பில் சிறந்த இளைஞர் சேவை அலுவலராக சசிகுமார் தெரிவு. [January 17, 2017]

கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் செயற்படுகின்ற ...
11 (1)

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட 230பேருக்கும் நியமனக்கடிதங்கள். [January 16, 2017]

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் மூன்றிற்கு திறந்த போட்டி ...
DSC_5706

ஜிஎஸ்பி+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் – ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ கணேசன் [January 16, 2017]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல ...
kattankudy

முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!.. [January 16, 2017]

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை ...
kattankudy Hospital

காத்தான்குடி தள வைத்தியசாலை சகல வசதிகளும் கொண்ட போதனா வைத்தியசாலையாக தரமுயர்கிறது- [January 12, 2017]

நாடாளாவிய ரீதியில் முஸ்லீம் பிரதேசங்களில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு ...
jpeg 8

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் குடிசார் சமூக அமைப்பு உதயம். [January 12, 2017]

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை, போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான குடிசார் சமூக அமைப்பொன்று ...
01

கொத்மலை தேயிலை மலையிலிருந்து வீழ்ந்து பெண் கங்காணி மரணம் [January 10, 2017]

கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் ...
hisbullah

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ். [January 10, 2017]

சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி ...