Thursday, January 19th, 2017

புதிய அரசியல் யாப்பில் வட கிழக்கு இணைப்பு இல்லை- த.தே.கூ. ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தகவல்

Published on January 6, 2017-5:39 pm   ·   No Comments

tna-colombo-1முஸ்லீம் தரப்பு சம்மதிக்கும் பட்சத்திலேயே வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் என்பதால் புதிய அரசியல் யாப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைப்பு தவிர எமது ஏனைய கோரிக்கைகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில் என்.சிறிகாந்தா, கோவிந்தன் கருணாகரன், எம்.சிவாஜிலிங்கம், கென்ரி மகேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சர்வேஷ்வரன், துரைரத்தினம், புளொட் சார்பில் சித்தார்த்தன், ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீர்வு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், சம்பந்தனும் ஏனைய உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் உதவியை நாடவேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டெல்லிக்கு சென்று இந்திய பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஆர்.சம்பந்தன் இந்திய தூதுவரை தாம் சந்தித்து வருவதாக தெரிவித்தார். tna-colombo-1tna-colombo-2tna-colombo

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kokkaddicholai

கொக்கட்டிச்சோலை படுகொலை 30ம் ஆண்டு வணக்க நிகழ்வு 28ஆம் திகதி சனிக்கிழமை. [January 18, 2017]

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் ...
batti

கடும் வரட்சி- மட்டக்களப்பில் 13164 விவசாயிகளும் 76199 பொதுமக்களும் பாதிப்பு [January 17, 2017]

கடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் ...
sasikumar

2014ம் வருடத்தில் மட்டக்களப்பில் சிறந்த இளைஞர் சேவை அலுவலராக சசிகுமார் தெரிவு. [January 17, 2017]

கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் செயற்படுகின்ற ...
11 (1)

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட 230பேருக்கும் நியமனக்கடிதங்கள். [January 16, 2017]

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் மூன்றிற்கு திறந்த போட்டி ...
DSC_5706

ஜிஎஸ்பி+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் – ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ கணேசன் [January 16, 2017]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல ...
kattankudy

முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!.. [January 16, 2017]

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை ...
kattankudy Hospital

காத்தான்குடி தள வைத்தியசாலை சகல வசதிகளும் கொண்ட போதனா வைத்தியசாலையாக தரமுயர்கிறது- [January 12, 2017]

நாடாளாவிய ரீதியில் முஸ்லீம் பிரதேசங்களில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு ...
jpeg 8

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் குடிசார் சமூக அமைப்பு உதயம். [January 12, 2017]

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை, போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான குடிசார் சமூக அமைப்பொன்று ...
01

கொத்மலை தேயிலை மலையிலிருந்து வீழ்ந்து பெண் கங்காணி மரணம் [January 10, 2017]

கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் ...
hisbullah

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ். [January 10, 2017]

சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி ...