Thursday, January 19th, 2017

பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் கிணற்றுக்குள் பூதம் – யாழ் குடா மக்கள் அதிர்ச்சி

Published on January 9, 2017-6:47 pm   ·   No Comments

ds-point-pedroபருத்தித்துறை பிரதேச செயலக அலுவலகத்திற்குள் கிணறு தோண்ட பூதம் கிழம்பி உள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. பருத்தித்துறை பிரதேச செயலாளர் தனது அலுவலகத்திற்குள் இருந்த வேப்ப மரத்தை விற்று பணமாக்கினார்.

அரச அலுவலகத்திற்குள் அல்லது அரசாங்கத்தின் காணிக்குள் இருக்கும் மரங்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் கட்டுபாட்டில் இருக்கும் இலங்கை வனவியல் திணைக்களத்திற்குச் சொந்தமானது. அரச அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் வேலை செய்யவும் அரச சம்பளம் எடுக்கவும் மட்டும் தகுதி உடையவர்கள்.

அலுவலகத்தில் இருக்கும் பொருட்களையோ அல்லது அலுவலகத்தில் இருக்கும் மரங்களையோ விற்க முடியாது. அரச காணியில் இருக்கும் மரங்களைத் தனியாருக்கு விற்பதானால் வனவியல் திணைக்களம் அதனைப் பொறுப்பெடுத்து அதனை வெட்டி இலங்கை மரக்கூட்டுத்தாபனத்திற்குக் கொடுக்கும். இலங்கை மரக்கூட்டத்தாபனம் அதனை யாழ் குடாநாட்டில் ஏலத்தில் விற்று பணமாக்கும். இலங்கையின் வனவியல் திணைக்களமும் மரக்கூட்டுத்தாபனமும் மைத்திரிபால சிறீசேனவின் கீழ் உள்ளது.

யாழ் அரச அதிபருக்குக் கீழ் வேலை செய்யும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் மரத்தை விற்றார். ஆனால் விற்ற மரத்தை வாங்கியவர் மரத்தை துண்டுகளாக்கி கொண்டு செல்ல ஆயத்தமானார். ஆனால் மரத்தை விற்க முதலும் மரத்தை வாங்கித் துண்டாடமுதலும் மரத்தை வீதியால் கொண்டு செல்ல வனவியல் திணைக்களம் மரம் வாங்கியருக்கும் மரம் விற்றவருக்கும் அனுமதி கொடுக்க வேண்டும்.

ஆனால் வனவியல் திணைக்களம் பிரதேச செயலாளர் விற்ற மரத்திற்கு மரத்தை வாங்கியவருக்கு மரத்தை கொண்டு செல்ல அனுமதி கொடுக்கவில்லை. மரம் அரச மரம். அந்த மரத்தை பிரதேச செயலாளர் விக்க உரிமை இல்லை என்பதால் மரத்தை கொண்டு சென்று தளபாடமாக்க வனவியல் திணைக்களம் அனுமதி மறுத்திருந்தது. ஆனால் பிரதேச செயலாளர் மரத்தை வாங்கியவரை மரத்தை அப்புறபடுத்துமாறு கடும் அழுத்தம் கொடுத்து வந்தார். பல நாட்கள் கடந்தும் மரம் அகற்றபடவில்லை.

மரத்தை விற்று மரத்தை துண்டாடிய பிறகு மரத்தை கொண்டு செல்ல இலங்கை அரச சட்டம் அனுமதிக்காது அதாவது மரத்தை தறித்துத் துண்டாடமுதலே அனைத்து சட்ட ஆவணங்களும் பூர்த்திச் செய்யவேண்டும். சரி மரத்தை வெளியே கொண்டு வந்தால் மரம் வாங்கியவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைக்கத் தமது புலனாய்வு பிரிவினரை இறக்கி இருந்தனர். மரம் வாங்கியவர் மரத்தை பிரதேச செயலகத்திற்குள் கைவிட்டுவிட்டு அமைதியாக இருந்தார். விடயம் விபரீதமாக எமது இணையத்தில் செய்தியாக வெளியே வந்தவுடன் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பருத்தித்துறை பிரதேச செயலாளர் கடுமையாக விசாரிக்கப்பட்டார்.

தற்போது பருத்தித்தறை பிரதேச செயலாளர் தமது பருத்தித்துறை பிரதேச செயலகக் கட்டிடம் முன்பு பிரதி அரச அதிபராக இருந்தவரின் பெயரில் இருப்பதாகவும் அது தனியாரின் காணி எனவும் தனியாரின் காணிக்குள் இருக்கும் மரத்துக்கு இலங்கை ஜனாதிபதியின் வினவியல் திணைக்களத்தின் அனுமதி தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் முன்பு உதவி அரச அதிபராக இருந்தவர் பருத்தித்துறையில் மக்களிடம் பணம் சேர்த்து பிரதேச செயலாளர் அலுவலகத்திற்குப் பொதுச் சொத்தாகக் காணிகளை வாங்கி இலங்கை அரசாங்கத்தின் பல மில்லியன் பெறுமதியான அரச அலுவலகக் கட்டிடங்களைக் கட்டியதாகவும் அப்பிரதேச செலாளர் அலுவலகத்தைத் தனது சொந்த காணியாகத் திருட்டு தனமாகக் கள்ள உறுதி முடித்துக் காணியைத் தனது சொந்த தனியார் காணியாக உறுதி முடித்முள்ளதுடன் அந்தக் காணிக்குள் அரச அதிபரின் பணத்தில் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்குக் கட்டிடம் கட்டி உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போது சுமார் 100 மில்லியன் பெறுமதியான பருத்திதறை பிரதேச செயலாளர் அலுவலகக் கட்டிடம் ஆருக்குச் சொந்தம் என்ற பூதம் யாழ் குடாநாட்டில் கிழம்பி உள்ளது. காணியைத் தனது சொந்த பேரில் வைத்திருப்பதால் தனியார் காணிக்குள் இருக்கும் கட்டிடம் காணி உரிமையாளருக்குச் சொந்தமாகும் ஆகவே பருத்திதறை பிரதேச செயலாளர் அலுவலகம் தற்போது சட்டபடி தனியாருக்குச் சொந்தமாக உள்ளது ஆகவே முன்பு பிரதி அரச அதிபராக இருந்தவர் இலங்கை அரசாங்கத்தின் பணம் 100 மில்லியனை மிகவும் நூணுக்கமாகத் தனது சொத்தாக்கி உள்ளமை பிடிபட்டுள்ளது.
முன்னாள் பிரதி அரச அதிபர் காணியைத் தனது சொந்த பெயரில் வைத்திருந்தமைக்காகப் பொலிசாரால் கைது செய்யபடுவாரா ? தனது சொந்த காணிக்குள் பிரதேச செயலாளர் அலுவலகம் என்று 100 மில்லியன் அரச பணத்தை வைத்துக் கட்டிடம் கட்டியமைக்காக அவர் கைது செய்யபடுவாரா ? தற்போது பிரதேச செயலாளர் அலுவலகம் இருக்கும் காணியையும் அந்தக் காணிக்குள் இருக்கும் 100 மில்லியன் பெறுமதியான கட்டித்தையும் பருத்தித்துறை நீதிமன்றம் அரசுடமையாக்குமா ?ds-point-pedro

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kokkaddicholai

கொக்கட்டிச்சோலை படுகொலை 30ம் ஆண்டு வணக்க நிகழ்வு 28ஆம் திகதி சனிக்கிழமை. [January 18, 2017]

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் ...
batti

கடும் வரட்சி- மட்டக்களப்பில் 13164 விவசாயிகளும் 76199 பொதுமக்களும் பாதிப்பு [January 17, 2017]

கடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் ...
sasikumar

2014ம் வருடத்தில் மட்டக்களப்பில் சிறந்த இளைஞர் சேவை அலுவலராக சசிகுமார் தெரிவு. [January 17, 2017]

கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் செயற்படுகின்ற ...
11 (1)

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட 230பேருக்கும் நியமனக்கடிதங்கள். [January 16, 2017]

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் மூன்றிற்கு திறந்த போட்டி ...
DSC_5706

ஜிஎஸ்பி+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் – ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ கணேசன் [January 16, 2017]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல ...
kattankudy

முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!.. [January 16, 2017]

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை ...
kattankudy Hospital

காத்தான்குடி தள வைத்தியசாலை சகல வசதிகளும் கொண்ட போதனா வைத்தியசாலையாக தரமுயர்கிறது- [January 12, 2017]

நாடாளாவிய ரீதியில் முஸ்லீம் பிரதேசங்களில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு ...
jpeg 8

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் குடிசார் சமூக அமைப்பு உதயம். [January 12, 2017]

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை, போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான குடிசார் சமூக அமைப்பொன்று ...
01

கொத்மலை தேயிலை மலையிலிருந்து வீழ்ந்து பெண் கங்காணி மரணம் [January 10, 2017]

கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் ...
hisbullah

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ். [January 10, 2017]

சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி ...